May 21, 2026
Thisaigal NewsYouTube
பொது மக்களை அறைந்த போலீஸ் அதிகாரி மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

பொது மக்களை அறைந்த போலீஸ் அதிகாரி மீது விசாரணை

Share:

கதவை உடைத்துக்கொண்டு, உணவகம் ஒன்றில் நுழைந்து விட்ட ஆடவர் ஒருவரை பிடித்து, கண்மூடித்தனமாக தாக்குவதாக கூறப்படும் போலீஸ் அதிகாரி மீது விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த ஆடவரை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பல முறை அறைந்து, பலவந்தத்தை பயன்படுத்தும் காட்சியை கொண்ட வீடியோ காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி பொது மக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார்.

Related News