கூச்சிங், அக்டோபர்.16-
மூன்று வயது சிறுமியைக் கொலை செய்ததாக மெக்கானிக் ஒருவர், சரவாக், கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 32 வயது முகமட் ஷுக்ரி ரியான் என்ற அந்த மெக்கானிக், மாஜிஸ்திரேட் நூர்ஷாஹிகா நஸ்வா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் கூச்சிங், ஜாலான் சுல்தான் கம்போங் ரம்பாங்கி என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் அந்த மெக்கானிக் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதின்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த மெக்கானிக்கிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை.