பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.05-
கடந்த சனிக்கிழமை செர்டாங், புத்ரா மலேசியா பல்கலைக்கழகம் அருகில் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுநருக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 7 நாள் சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க உத்தரவிட்டது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 30 பாலர் பள்ளி மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்களில் மூன்று பிள்ளைகளும், ஒரு ஆசிரியரும் காயமுற்றனர்.
கவனக்குறைவாகச் செயல்பட்ட குற்றத்திற்காக 1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 44 வயது ஹமீர் மஸ்ருடின் என்ற அந்த பேருந்து ஓட்டுநர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.








