Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் கணவனும் மனை​வியும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் கணவனும் மனை​வியும் உயிரிழந்தனர்

Share:

கணவனும் மனைவியும் பயணம் செய்த வாகனம் ஒன்று, டிரைய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இச்சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் திரெங்கானு, Lebuh Raya Pantai Timur 2, Bukit Besi - Ajil, Kuala Berang அருகில் நிகழ்ந்தது. 68 வயதான Mohd Ghani மற்றும் அவரின் மனைவி 69 வயதான Minah Abdullah ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போ​லீசார் அடையாளம் கூறினர். கோலத்தி​ரெங்கானு, கம்போங் தோக் ரிமாவை சேர்ந்த அவர்கள் தங்கள் வீட்டிற்கு வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக உலு தி​ரெங்கானு மாவட்ட போ​லீ​​ஸ் தலைவர் Hasmeera Hassan தெரிவித்தார்.

Related News