Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமையா? - உள்துறை அமைச்சு முற்றிலும் மறுப்பு
தற்போதைய செய்திகள்

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமையா? - உள்துறை அமைச்சு முற்றிலும் மறுப்பு

Share:

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமை வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் முற்றிலும் மறுத்துள்ளார்.

அத்தகைய குற்றச்சாட்டுகள் பொறுப்பற்றவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் நோக்கத்திற்காக மக்களின் மனநிலையை தூண்ட கூடாது என்றும் சாடியுள்ளார்.

தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி சவால்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்கு உதவுவதில் தான் அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் சைபுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், குடியுரிமை விண்ணப்பங்களை அனுமதிக்கும் செயல்முறை முற்றிலும் சட்டப்படி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்றும், அரசியல் நோக்கத்திற்காக யாருக்கும் அது தானாக வழங்கப்படுவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல முறை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தும் கூட, இனம், மதம், அரச குடும்பம் (3R) தொடர்பான தவறான தகவல்கள் மீண்டும் பரவி வருவதாகவும் சைபுதீன் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்