Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்
தற்போதைய செய்திகள்

தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்

Share:

உடன் பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து, கற்பமாக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 15 வயதுடைய இளைஞனை, Henry Gurney சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட அந்நபர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜூன் 21 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தனது சொந்த சகோதரியுடன் negeri Sembilan, Jempol லில் உள்ள வீட்டில் உடலுறவில் ஈடுபட்டதற்காக குற்றம் சாட்டப்பட்டார்.


இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவாக, அந்த இளைஞனை, செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்றாண்டுகளுக்கு மலாக்கா தெலோக் மாஸில் உள்ள Henry Gurney பள்ளிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே வேளையில், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அவ்விளைஞனை ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று Majistret, Norshazwani Ishak தெரிவித்தார்.

Related News