Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன

Share:

2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள், நாளை ஜுன் 8 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கின்றன. மாணவர்கள் காலை 10 மணி முதல் தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தவிர myresultspm.moe.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் அஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படும். அல்லது மாநில கல்வி இலாகாவில் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை நாடு தழுவிய நிலையில் 3,355 மையங்களில் 4 லட்சத்து மூவாயிரத்து 637 மாணவர்கள் எழுதியதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Related News