Jan 22, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனுக்கு எதிராக போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

முகைதீனுக்கு எதிராக போலீசில் புகார்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் அல்லாதவர்களே ஆட்சி செலுத்தி வருகின்றனர் என்று கூறியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீனுக்கு எதிராக புக்கிட் பென்டேரா எம்.பி. சியர்லீனா அப்துல் ரஷீத் போலீசில் புகார் செய்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க முற்பட்டுள்ள முகைதீனுக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று முந்தைய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் உறுதியாக இருந்த வேளையில் தற்போது அந்த சொல் தொடர்பாக சரவா மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து எந்வொரு மேல்முறையீடும் செய்யாமல் அன்வார் இருப்பது மூலம் அவர் தலைமையிலான அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் அல்லாதவர்களே வழிநடத்துகின்றனர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என்று முகைதீன் அ ண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Related News