Oct 6, 2026
Thisaigal NewsYouTube

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான, அச்சமற்ற பள்ளிச்சூழலில் கல்வி கற்கும் உரிமை இருப்பதாக மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமின் குழந்தைகள் நலன் பிரிவின் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர். 16 வயது மாணவி ஐரின் சோஃபியா பள்ளி வளாகத்தில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுஹாகாம் குழந்தைகள் நலன் பிரிவின் தலைமை ஆணையர் டாக்டர் ஃபாரா நினி டுசுகி கூறுகையில் பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும், கூடுதல் வகுப்புகள், இணைப்பாட நடவடிக்கைகள், விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் பள்ளி நேரத்துக்குப் பிந்தைய நடவடிக்கைகளின்போதும் மாணவர்களின் இருப்பிடத்தை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு சுஹாகாம் ஆணையரான இணை பேராசிரியர் டாக்டர் முஹமட் அல்-அடிப் சமுரி கூறுகையில், பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும் எங்கே இருக்கிறார் என்பதை எந்த நேரத்திலும் பள்ளியால் உறுதிப்படுத்தக்கூடிய நடைமுறைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு என்பது சிசிடிவி, வேலி மற்றும் பாதுகாவலர்களுடன் மட்டும் முடிந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐரின் சோஃபியா மரணம் தொடர்பான போலீஸ் விசாரணையை மதிக்க வேண்டும் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், ஊகங்கள் மற்றும் சமூக ஊடக குற்றச்சாட்டுகளைப் பரப்ப வேண்டாம் என்றும் சுஹாகாம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

18 முதல் 29 வயதினரில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவில்லை

18 முதல் 29 வயதினரில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவில்லை