Jun 30, 2026
Thisaigal NewsYouTube
 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்
தற்போதைய செய்திகள்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

Share:

ஜோகூர், பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் இன்று மதியம் ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் மதியம் 1.54 மணியளவில், 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

பத்து பஹாட் பகுதியில் இதற்கு முன்னதாகக் கடந்த மார்ச் 14-ஆம் தேதி ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சிகமாட் பகுதியில் ஏற்பட்ட 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிகமாட் , குளுவாங் மற்றும் பத்து பஹாட் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரிக்டர் அளவில் 2.5 முதல் 3.4 வரை பதிவான பல அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கம் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டிருந்தாலும், இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Related News