மண் லோரி உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்ததுடன் அறுவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று கலை 7.30 மணியளவில் ஜாலான் ஜொகூர் பாரு - ஆயேர் ஹீதாம் சாலையின் 77 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
இதில் தனது பிள்ளையை பள்ளிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த பெரோடுவா அக்ஸியா காரோட்டியான 40 வயது மாது, கடுமையான காயங்களுக்கு ஆளாகி சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார்.
அந்த காரை மோதுவதற்கு முன்னதாக மண் லோரியுடன் மோதிய மற்றொரு பெரோடுவா அக்ஸியா காரோட்டி உட்பட அறுவர் காயம் அடைந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி பஹ்ரின் முகமட் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


