நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் கோலகுபு பாரு தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ரா. சிவபிரகாஷ், வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும் தொடர்ந்து அத்தொகுதி மக்களுக்கு இயன்ற வரையில் சேவையாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளார்.
கோலகுபு பாரு தொகுதியில் தமது தொடர் சேவையின் அடையாளமாக கம்போங் அசாம் கும்பாங் பகுதியில் உள்ள அனைத்து நிலைகளையும் சேர்ந்த மக்களுக்கு தற்போது உதவித்தொகைக்குரிய 3 வெள்ளிக்கு காலை பசியாறையை டாக்டர் சிவபிரகாஷ் வழங்கி வருகிறார்.
தனிப்பட்ட முயற்சியில் டாக்டர் சிவபிராகாஷ் வழங்கும் இந்த அனுகூலம், வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் முதல் 50 பேருக்கு என்று வரையறுக்கப்பட்ட நிலையில் இந்த 3 வெள்ளிக்குரிய காலை பசியாறையை வழங்கவிருக்கிறார்.
இந்த உதவியானது, மேற்கண்ட பகுதியில் B40 தரப்பைச் சேர்ந்த மக்களின் சுமையை சற்று குறைக்கும் என்று டாக்டசிவபிரகாஷ் நம்புகிறார்.
தவிர வாழ்வாதாரம் நன்றாக இருந்தால் இதனை உலு சிலாங்கூரில் உள்ள பல இடங்களில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


