Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மித்ராவின் தலைவாக தொடர்ந்து செயல்படுவார்
தற்போதைய செய்திகள்

மித்ராவின் தலைவாக தொடர்ந்து செயல்படுவார்

Share:

தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஆர். ரமணன், மலேசிய இந்தியர் பொருளாதார, சமூகவில் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் சிறப்புப்பணிக்குழுத் தலைவராக தொடர்ந்து செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மித்ராவின் சிறப்புப் பணிக்குழுத் தலைவர் என்ற முறையில் அப்பதவியை தொடர்ந்து வகித்து வருவதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ரமணன் விளக்கம் அளித்துள்ளார்.

துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் மித்ராவின் சிறப்புப் பணிக்குழுத் தலைவர் பதவியை துறந்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு டத்தோ ரமணன் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த அமைச்சரவை சீரமைப்பில் முதல் முறையாக துணை அமைச்சர் பதவியை ஏற்றுள்ள சுங்கை பூலோ எம்.பி.யான டத்தோ ரமணன், இன்று காலையில் புத்ரா ஜெயாவில் தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சில் தமது பணியை தொடங்கினார்.

Related News