May 21, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர் அல்லாதவர்கள் பிரதமராகுவதை தடுக்க அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் அவசியமில்லை பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர் அல்லாதவர்கள் பிரதமராகுவதை தடுக்க அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் அவசியமில்லை பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

மலாய்க்கார்கள் அல்லாதவர்கள் நாட்டின் பிரதமராகுவதை தடுக்க அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையில் பிரதமர் வேட்பாளர்கள் மலாய்க்காரர்களாகவே இருந்துள்ளனர்.

எனவே மலாய்க்காரர் மட்டுமே பிரதமராக முடியும் என்பதை வரையறுக்க அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமால் முன்வைத்துள்ள பரிந்துரை அவசியமில்லாதது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அரசாங்கத்தில் பிரதமராக இருப்பவரும், எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளரும் மலாய்க்காரராக இருக்கும் பட்சத்தில் சட்டத்திருத்தம் அவசியமில்லை. மலேசிய மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் . அனைத்து இனத்தவர்கள், அனைத்து பிரதேசங்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

Related News

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!