ஈப்போ, ஜனவரி.02
தனது பெற்றோரை சமுராய் வாளால் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 30 வயதான அய்மான் சுஹைமியை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த ஈப்போ அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 342-ன் கீழ், இந்த உத்தரவை நீதிபதி அய்னுல் ஷாரின் பிறப்பித்தார்.
இதன் அடிப்படையில், அய்மான் சுஹைமியை தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி, காலை 6.30 மணியளவில், பெர்சாம், பண்டார் பாரு புத்ராவிலுள்ள வீடு ஒன்றில், அய்மான் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காயமடைந்த அய்மானின் பெற்றோர், தற்போது ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.








