Apr 13, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக சுங்கை கோலோக் ஆற்றைக் கடக்க முயன்ற 34 தாய்லாந்து மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக சுங்கை கோலோக் ஆற்றைக் கடக்க முயன்ற 34 தாய்லாந்து மாணவர்கள் கைது

Share:

கிளந்தான் மாநிலம் ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள பள்ளிக்கு செல்ல சட்டவிரோதமாக சுங்கை கோலோக் ஆற்றை கடந்து வந்த 7 முதல் 16 வயதுக்குட்பட்ட 34 தாய்லாந்து மாணவர்களை போலீசார் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை 6.30 மணியளவில் அம்மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தென்கிழக்கு பிரிகேட் பொது செயல்பாட்டுப் படையான GOF தளபதி அகமது ராட்ஸி ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 5(2) கீழ் கைது செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக குடிநுழைவு இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களாக இருந்தாலும், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நுழைவு வழிகளை பயன்படுத்தாதவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள் என்று அகமது ராட்ஸி ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரந்தாவ் பாஞ்சாங்கில் பள்ளிக்கு செல்வதற்காக தாய்லாந்து மாணவர்கள் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News