Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் கருக்கலைப்பு சம்பவத்தில், பெண் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமானதாக நம்பப்படும் முன்னாள் கிளினிக் ஊழியர்கள் இருவர், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டனர்.

83 வயதான பிலோமினா மத்தியாஸ் மற்றும் 73 வயதான ருஸ்பூர் கவுர் பிரதாப் சிங் ஆகியோர், 45 வயது பெண்ணின் மரணத்திற்கு காரணமானதாக இருவரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2024 -ஆம் ஆண்டு, அக்டோபர் 22-ஆம் தேதி, மாலை 5.30 மணியளவில், ஜாலான் சாங்காட் புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 314-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிஇல்லி மரிஸ்கா காலிசான் இருவருக்கும் தலா 3,000 ரிங்கிட் ஜாமீனை ஒருவரின் உத்தரவாதத்துடன் வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related News