Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கேபிள் திருடர்களை விரட்டியடித்த பொதுமக்கள் - வைரல் வீடியோ
தற்போதைய செய்திகள்

கேபிள் திருடர்களை விரட்டியடித்த பொதுமக்கள் - வைரல் வீடியோ

Share:

சுபாங் ஜெயா, SS18 குடியிருப்புப் பகுதியில், பட்டப்பகலில் கேபிள்களைத் திருட முயன்ற கும்பல் ஒன்று, பொதுமக்களின் துணிச்சலான எதிர்ப்பால் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 30 விநாடி காணொளியில், கம்பி வெட்டும் கருவியுடன் வந்த திருடர்கள், கேபிள்களைத் துண்டித்து வாகனங்களில் ஏற்ற முயல்வது தெரிகிறது. அப்போது அங்கிருந்த குடியிருப்பாளர் ஒருவர், "கேபிள் திருடர்கள்... கேபிள் திருடர்கள்..." என்று சத்தமிட்டு அவர்களை நோக்கிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திருடர்கள், வெட்டப்பட்ட கேபிள்கள் மற்றும் கருவிகளுடன் தங்களது வாகனங்களில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பினர். அந்த நபர் திருடர்களின் வாகன எண்களையும் உரக்கக் கூறி பதிவு செய்துள்ளார்.

தற்போது சர்வதேச சந்தையில் தாமிரத்தின் விலை அதிகரித்து வருவதால், இத்தகைய திட்டமிட்ட கும்பல்கள் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கேபிள்களைக் குறிவைத்துத் திருடி வருகின்றன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்