கோத்தா கினபாலு, செப்டம்பர்.26-
பிரதமரும், பிகேஆர் கட்சித் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக சபாவிற்குச் செல்கிறார்.
பிற்பகலில் கோத்தா கினபாலு சர்வதேச விமான நிலையத்தை அடையவுள்ள அவர், பின்னர், ரெஃபோர்மாசி இயக்கத்தின் 27-வது ஆண்டு நிறைவையொட்டி இனானாம், தாவாவ் மற்றும் சண்டாகான் ஆகிய இடங்களில் நடைபெறும் மூன்று பிகேஆர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
நாளை சண்டாகானில் நடைபெறும் ஜெலாஜா வீரா மடானி என்ற மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பின்னர், மலாக்கா பத்து பெரெண்டாம் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டு, தனது சபா பயணத்தை நிறைவுச் செய்கிறார்.








