Oct 18, 2026
Thisaigal NewsYouTube

நேபால் பயணத்தை ஒத்திவைக்குமாறு ஆலோசனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேபால் பயணத்தை ஒத்திவைக்குமாறு ஆலோசனை

கோலாலம்பூர், செப்டம்பர் 30-

நேபாளம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள மலேசியர்கள், அந்தப் பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது நேபாலில் அடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் சங்கிலித் தொடரைப் போன்று நிகழ்ந்து வருகின்றன.

அந்த நாட்டின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி பெய்த கனத்த மழையில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்நிலையில் மலேசியர்கள், அந்த நாட்டிற்கு தற்போது பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று நேபால் தலைநகர் காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதர்முகமது ஃபிர்தௌஸ் அஸ்மான் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →