Apr 2, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் ரோட்டரி கிளப் ஏற்பாடு: பேரிடர் நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா
தற்போதைய செய்திகள்

கிள்ளான் ரோட்டரி கிளப் ஏற்பாடு: பேரிடர் நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

Share:

தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிள்ளான் ரோட்டரி கிளப், ரோட்டரி மாவட்டங்கள் 3300, நிவாரண நிதி திரட்டியது. இந்த மனிதாபிமான பணிக்கு தாராளமாக நிதி வழங்கிய நன்கொடையாளர்களைக் கௌரவிக்கும் வகையில், நேற்று ஏப்ரல் முதல் தேதி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஹீ லாய் டன் உணவகத்தில் சிறப்பு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

கிள்ளான் ரோட்டரி கிளப் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ரவி ராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. வெள்ள நிவாரண நிதிக்கு பங்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

திரட்டப்பட்ட நிதியானது பாதிக்கப்பட்ட நாடுகளின் அதிகாரப்பூர்வ நிவாரண முகமைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டதாக டத்தோஸ்ரீ டாக்டர் ரவி ராஜ் தெரிவித்தார்.

பேரிடர் நம்மைத் தாக்கும் போது, நாம் யார், எந்த நாடு என்ற பாகுபாடு அதற்குத் தெரிவதில்லை; அது நமக்கிடையிலான எல்லைகளைப் பிரித்துப் பார்ப்பதுமில்லை. எல்லைகளைக் கடந்து பிற நாடுகளின் பேரிடர் துயர்துடைப்புப் பணிகளில் ரோட்டரி கிளப்பினால் எப்படி உதவ முடியும் என்பதை இன்று இரவு நாம் இங்கே நேரில் காண்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று ரோட்டரி கிளப் மாவட்டங்கள் 3300 ஆளுநர் எட்வர்ட் கூ தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட மலேசியாவிற்கான இலங்கை இடைக்காலத் தூதர் எம்.ஐ. முகமது ரிஸ்வி கூறுகையில் பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் நிதி திரட்டி, உதவிக்கரம் புரிந்துள்ள ரோட்டரி கிளப் பொறுப்பாளர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மூன்று நாடுகளுக்கான நிவாரண நிதியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை தாங்கள் திரட்டியதாக ரோட்டரி கிளப்பின் முன்னாள் உதவி ஆளுநர் கனகேஸ்வரி கார்த்திகேயன் தெரிவித்தார்.

மூன்று நாடுகளுக்கான நிவாரண நிதியை திரட்டும் திட்டத்திற்கு தலைமையேற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ரவிராஜ் மற்றும் அவர்தம் குழுவினருக்கு முன்னாள் உதவி ஆளுநர் ரத்னவேலு ராஜகோபால் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டர்.

நிவாரண நிதி திரட்டல் பாராட்டு நிகழ்வில் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related News

வெ.3 மில்லியன் செலவில் பீடோரில் நவீன மின்சுடலை – டத்தோ சிவநேசன் தகவல்

வெ.3 மில்லியன் செலவில் பீடோரில் நவீன மின்சுடலை – டத்தோ சிவநேசன் தகவல்

பெந்தோங்கில் மாயமான இந்தியக் குடும்பம் மீட்பு: குடும்பத் தகராறே காரணம் என போலீஸ் தகவல்

பெந்தோங்கில் மாயமான இந்தியக் குடும்பம் மீட்பு: குடும்பத் தகராறே காரணம் என போலீஸ் தகவல்

கார்ப்பரேட் குற்றங்கள்’ புதிய அச்சுறுத்தல்; ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

கார்ப்பரேட் குற்றங்கள்’ புதிய அச்சுறுத்தல்; ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்த 54 வயது நபர் கைது

சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்த 54 வயது நபர் கைது

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை