சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு இழுபறி நிலையில் இருந்து வந்த நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமன விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு குவாலா பிலா, இஸ்தானா பெசார் செரி மெனந்தி, பாலைருங் செரி அரண்மனையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவிருக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநில சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்வதுடன், ரகசிய காப்புப்பத்திரத்தில் கையெழுத்திடுவர். ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கிற்கு பிறகு முதலாது ஆட்சிக்குழு கூட்டம் மாநில மந்திரி பெசார், டதுல் செரி அமினுடின் ஹாருன் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் 36 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 31 தொகுதிகளில் வென்றது. பக்காத்தான் ஹராப்பான் 17 தொகுதிகளையும், பாரிசான் நேஷனல் 14 தொகுதிகளையும் கைப்பற்றி, மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்க ஆட்சிக்கு வித்திட்டுள்ளன.
பாரிசான் நேஷனலை பிரதிநிதித்த அம்னோ அதிகமான தொகுதிகளை வென்ற காரணத்தினால் மாநில ஆட்சிக்குழுவில் அது 6 இடங்களை கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


