கடந்த வாரம் நடைபெற்ற அம்னோ பொதுக்குழு கூட்டத்தில் சமய உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக, சிப்பாங் அம்னோ தலைவர் நூராஸ்லி சையிட் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக இதுவரை 86 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், அம்னோ பிரதிநிதிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் நூராஸ்லி உள்ளிட்ட 93 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 298 மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-ன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
அம்னோ பொதுக்குழுவில், கத்தோலிக்க பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி தொடர்பான நகைச்சுவையை நூராஸ்லி பேசியதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.
பின்னர் அவர் தமது கருத்திற்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்நிலையில், போலீசாரின் விசாரணை ஆவணங்களை இன்று, செப்டம்பர் 18-ஆம் தேதி, சட்டத்துறைத் தலைவர் அலுவலகமான ஏஜிசியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஏகிசியின் உத்தரவு மற்றும் ஆலோசனை பெறப்பட உள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.








