சபா மாநிலம் பெனாம்பாங்கில் உள்ள ஜாலான் புண்டுசான் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 20 வயது தொழிலாளி ஒருவர், கட்டிடத்தின் 20-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று செப்டம்பர் 17-ஆம் தேதி காலை சுமார் 10.40 மணியளவில் நிகழ்ந்தது. கட்டிடத்தின் 20-வது மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி அவர் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு தொழிலாளி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதாக பெனாம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் சேம்மி நியூட்டன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








