May 22, 2026
Thisaigal NewsYouTube
உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வேலையில்லா நபர் குற்றச்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வேலையில்லா நபர் குற்றச்சாட்டப்பட்டார்

Share:

மூவார், ஜூன் 20-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வேலையில்லா நபர் ஒருவர் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

27 வயது அந்த வேலையில்லா நபர் நீதிபதி அபுபக்கர் மனாத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மூவார், தங்காக் -வில் உள்ள பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியின் வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News