கோலாலம்பூர், ஜூலை.16-
பந்தல்களுக்கான உபகரணங்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று திடீரென்று தீப்பிடித்துச் சேதமுற்றது. இந்தச் சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில், கெந்திங் செம்பா அருகில் நிகழ்ந்தது.
செலாயாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திலிருந்து விரைந்த 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள், 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் லோரி 90 விழுக்காடு அழிந்தது.
அதிர்ஷ்டவசமாக உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை.
இந்தச் சம்பவத்தினால் இன்று காலையில் கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.








