சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 3 உடன் பிறப்புகள் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 13 க்கும் 16 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 3 உடன் பிறப்புகள் நேற்று, kangar, kampung tambun tulang என்ற இடத்தில் மீட்கப்பட்டதாக, kangar மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yusharifuddin Muhammad தெரிவித்தார்.
அந்த மூன்று பிள்ளைகளும், அவரின் சொந்த தாயாரால் சித்ரவதைக்கு ஆளாகி இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த மூவரில் ஒருவர் மாற்றுத் திறனாளி என்று தெரிவித்த ACP Yusharifuddin, மூவரும் தற்போது kangar tuanku fauziah மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.








