Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள தன்னுடைய தூதரகத்தைத் தற்காலிகமாக மூட மலேசியா உத்தரவிட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள தன்னுடைய தூதரகத்தைத் தற்காலிகமாக மூட மலேசியா உத்தரவிட்டுள்ளது

கோலாலம்பூர், ஜூன்.21-

தூதரகப் பணியாளர்கள் உட்பட ஈரானில் உள்ள அனைத்து மலேசியர்களும் உடனடியாக நாடு திரும்ப வேண்டுமென வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் உத்தரவிட்டார்.

ஈரான் கோம் நகரில் மூன்று மாணவர்கள் மற்றும் இஸ்ஃபாஹான் நகரில் ஒருவரும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, இதனால் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான்-இஸ்ரேல் பதட்டங்களால் ஈரானில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள், அருகிலுள்ள துர்க்மெனிஸ்தானை அடைய 13 மணிநேரப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

ஈரானியத் தலைநகரான தெஹ்ரானில் இருந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதால், தரை போக்குவரத்து வழியாக மலேசியர்களை வெளியேற்றும் பணிகளை அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →