Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு வங்காளதேசப் பெண்கள் பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு வங்காளதேசப் பெண்கள் பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்டனர்

கோலாலம்பூர், நவ.19-


மலேசியாவில் கவர்ச்சிகரமான சம்பளத்தில் நல்ல வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி அழைத்து வரப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு வங்காளதேசப் பெண்கள், குடிநுழைவுத்துறையினரால் மீட்கப்பட்டனர்.

உளவுத்துறையின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு வர்த்தக மையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 30 மற்றும் 34 வயதுடைய இரண்டு வங்காளதேசப் பெண்கள் பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த இருப்பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, இடைத் தரகர்களாக செயல்பட்டு வந்த 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →