Jun 16, 2026
Thisaigal NewsYouTube
உலகளவில் எரிசக்தி நெருக்கடி தொடர்கிறது / அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொருளாதார அமைச்சர் கருத்து
தற்போதைய செய்திகள்

உலகளவில் எரிசக்தி நெருக்கடி தொடர்கிறது / அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொருளாதார அமைச்சர் கருத்து

Share:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அண்மைய பேச்சுவார்த்தைகளும், போர் நிறுத்தமும், உலகளவில் எரிசக்தி நெருக்கடிக்காக இறுதித் தீர்வாகக் கருதிவிட முடியாது என பொருளாதார அமைச்சர் டத்தோ அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் இன்னும் முழுமையாக தணியாததால், உலக எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ப்ரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 90 அமெரிக்க டாலருக்கும் கீழ் இருந்ததாகவும், ஸ்பாட் எண்ணெய் விலை 100 டாலருக்கும் குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வார நிகழ்வுகள் எண்ணெய் விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இது காட்டுகிறது என்றார்.

இருப்பினும், நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறுவதற்கு இன்னும் காலம் ஆகும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related News