Jun 16, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி கடற்பகுதியில்  ஜெட்ஸ்கி ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

லங்காவி கடற்பகுதியில் ஜெட்ஸ்கி ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது

Share:

லங்காவியில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஜெட்ஸ்கி எனப்படும் நீர் சறுக்கு ஊர்தியை மீட்க முயன்ற 23 வயது இளைஞர் மாயமான நிலையில், நேற்று மாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடலில் தீவிரத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், நேற்று மாலை அவரது சடலத்தைக் கண்டறிந்தனர்.

உயிரிழந்தவர் லங்காவி பகுதியைச் சேர்ந்த ஜெட்ஸ்கி ஓட்டுநரான ஆராஷ் நஷ்ரான் அப்துல் மாசெர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related News