Jun 9, 2026
Thisaigal NewsYouTube
எவரெஸ்ட்டில் மாயமான மலேசியர் ஹவாரி இறந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் - நேபாள அரசிடம் மலேசிய குழு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

எவரெஸ்ட்டில் மாயமான மலேசியர் ஹவாரி இறந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் - நேபாள அரசிடம் மலேசிய குழு கோரிக்கை

Share:

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி, உலகின் உயரமான சிகரமான மவுண்ட் எவரெஸ்ட்-ஐ வெற்றிகரமாக அடைந்த மலேசிய மலையேற்ற வீரர் முகம்மது ஹவாரி ஹாஷிம், மலை உச்சியிலிருந்து கீழே இறங்கும் வழியில் மர்மமான முறையில் மாயமானார்.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும், ஹவாரி பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஆவணத்தை நேபாள அரசாங்க வழங்க வேண்டும் என்று மலேசிய எவரெஸ்ட் 2023 குழுத் தலைவர் தான் ஸ்ரீ சாலே முகமது நூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக மலேசியாவிலுள்ள நேபாள தூதரகத்தின் உதவியையும் நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரண அறிவிப்பு சான்றிதழ் கிடைத்தால், ஹவாரியின் குடும்பத்தினர் காப்பீட்டு கோரிக்கைகள், வேலை தொடர்பான விவகாரங்கள் மற்றும் பிற சட்ட ஆவணங்களை எளிதில் மேற்கொள்ள முடியும் என்றும் சாலே முகமது நூர் தெரிவித்துள்ளார்.

Related News