ஹஜ்ஜுப் பெருநாளின் போது, பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா, மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்ட விவகாரதில், அவர் பயன்படுத்தியதாக நம்பப்படும் Shotgun துப்பாக்கி மற்றும் ஒன்பது தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய 38 வினாடிகள் கொண்ட காணொளி தொடர்பாக புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மந்திரி பெசாரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் யுஷாரிஃபுதீன் யுசோப் தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், அந்த ஷாட்கன் துப்பாக்கிக்கான செல்லுபடியாகும் உரிமம் அபு பக்காரிடம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணியாளர்களை அச்சுறுத்திய அந்த ஆக்ரோஷமான மாட்டை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.








