Jan 9, 2026
Thisaigal NewsYouTube
குளத்தில் மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

குளத்தில் மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்

Share:

ஷா ஆலாம், ஜனவரி.09-

70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், மழைநீர் தேக்கக் குளத்தில் பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை காலை 11.30 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் செக்‌ஷன் யு11, புக்கிட் பண்டாராயா, ஷா ஆலாமில் அந்த மூதாட்டியின் சடலம் குளத்தில் மிதப்பது போலீசாருக்குத் தெரிய வந்தது.

உள்ளூரைச் சேர்ந்த அந்த மூதாட்டின் உடலை, குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலில் கண்டதாக விசாரணையில் தெரிய வந்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்சேய் எம்போல் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில தடயவியல் போலீஸ் துறையின் உதவியுடன் அந்த மூதாட்டியின் உடல் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மூதாட்டி, அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 48 மணி நேரத்திற்கு முன்பு அவர் இறந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்த மூதாட்டியின் உடலை, அவரது மூத்த சகோதரி அடையாளம் காட்டியதாக ஏசிபி ரம்சேய் தெரிவித்தார்.

Related News