கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-
சபா, கோத்தா கினபாலு, கோலோம்போங், கம்போங் செண்டெராகாசே என்ற இடத்தில் இன்று காலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் புதையுண்டு மரணமுற்ற வேளையில், அறுவர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வரும் வேளையில், மலைப்பாங்கான மேற்கண்ட கிராமத்தில், நிலப்பகுதி, நிலைத்தன்மையை இழந்து, நிலச்சரிவுக்கு வித்திட்டுள்ளது.
காலை 10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஒருவர் புதையுண்டது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனதாகக் கூறப்படும் அறுவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.








