அதிவேக சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் ஒருவர், சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம், இன்று அதிகாலை 2.40 மணியளவில் செராஸ் - காஜாங் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண், சாலைத் தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே மாண்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாயிட் ஹசான் தெரிவித்தார். 36 வயதுடைய அந்தப் பெண், Kawasaki Z10000 ரக மோட்டார் சைக்கிளில் கெப்போங்கிலிருந்து காஜாங், Sungai Long கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தாக எசிபி முகமட் ஸாயிட் மேலும் விவரித்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


