நாட்டில் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ள அரச்சாங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரத்தைக் கையாளுவதற்கு உயர் நிலையிலான குழு ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
தங்களை நிரந்தர பணிக்கு அமர்த்தப்படாமல் தொடர்ந்து, ஒப்பந்த மருத்துவர்களாக பணியில் அமர்த்திருக்கும் சுகாதார அமைச்சின் முடிவை எதிர்த்து நாளை மறுநாள் திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில் 8 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் மறியல் நடவடிக்கையில் ஈடுப்பட விருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்களின் பிரச்னைகளைக் கவனிப்பதற்கு அரசாங்க தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலி உட்பட சில அமைச்சுகளின் முக்கியத் தலைவர்களை உள்ளடக்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னையைக் கையாளும் என்றும் டாக்டர் ஜாலிஹா நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


