கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
வாகனப் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அழிந்தன. இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 24 இல் உள்ள வாகன டயர் பட்டறையில் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் பட்டறையின் காவலாளி என்று நம்பப்படும் 30 வயது ஆடவர் சொற்ப தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
ஷா ஆலாம் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங்கிலிந்து விரைந்த தீயணைப்பு வண்டிகள், பத்துக்கும் மேற்பட்ட வீரர்களின் முழு பலத்துடன் தீயைக் கட்டுப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அந்தப் பட்டறை கிட்டத்தட்ட 90 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.








