கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-
சபா, கோத்தா கினபாலு, கோலோம்போங், கம்போங் செண்டெராகாசே கிராமத்தில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் புதையுண்டு, மாண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
பிற்பகல் 3.30 மணி வரை எழுவர் மாண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சபாவில் கனத்த மழை பெய்து வரும் வேளையில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலச்சரிவில் கால் முறிவுக்கு ஆளாகி உயிர் பிழைத்த நபர், கோத்தா கினபாலு, குயின் எலிஸபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.








