Oct 17, 2026
Thisaigal NewsYouTube

டிரெய்லர் லோரியின் கொள்கலன் விழுந்ததில் மாது உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிரெய்லர் லோரியின் கொள்கலன் விழுந்ததில் மாது உயிரிழந்தார்

புக்கிட் மெர்தாஜம், நவ.13-


டிரெய்லர் லோரியின் கொள்கலன், பிடிமானம் விலகி, வாகனங்களின் மீது கழன்று விழுந்ததில் மாது இளம் பெண் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 9.31 மணியளவில் பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், ஜாலான் புக்கிட் தெங்காவில் நிகழ்ந்தது. பெரோடுவா பெஸா, டோயோட்டா அட்லிஸ், ஹாண்டா ஜஸ் மற்றும் ஒரு மூன்று டன் லோரி ஆகியவற்றின் மீது அந்த ராட்ஷச கொள்கலன் விழுந்தது.

இதில் பெரோடுவா பெஸா காரில் பயணித்த 21 வயது லீ ஸி ரோவ் என்ற இளம் பெண், கார் நசுங்கி, சம்பவ இடத்திலேயே மாண்டார். ஹோண்டா ஜஸ் வாகன ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

வாகனமோட்டும் பகுதியில் கொள்கலன் விழுந்ததால் தலையில் கடுமையான காயங்களுக்கு ஆளாகி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் இரண்டு பாரந்தூக்கி இயந்திரங்களைப் பயன்படுத்தினர் என்று பண்டார் பெர்டா தீயணைப்பு, மீட்புப்படை நிலைய கமாண்டர் முகமட் நோர் அஸாமுடீன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →