கோலாலம்பூர், டிசம்பர்.15-
நாளை டிசம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டம், வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் அறிவித்துள்ளார்.
எல்லைத் தகராறு தொடர்பில் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நடப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தாய்லாந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நடப்பு நெருக்கடி தொடர்பில் பிரச்னையை கையாளும் விதமாக கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி கம்போடியா பிரதமர் Hun Manet மற்றும் தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul ஆகியோருடன் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசினார்.
அந்த பேச்சின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்தார்.








