சிரம்பான், ஜூலை.25-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலை யில் 262 ஆவது கிலோமீட்டரில் 15 மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இன்று 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் தீவிர சிசிச்சைப் பெற்று வந்த அந்த மாணவர், சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
இந்த விபத்து தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹாத்தா சே டின் தெரிவித்தார்.








