Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இயக்கவாதி சித்தி காசிமை கொல்ல முயற்சி
தற்போதைய செய்திகள்

இயக்கவாதி சித்தி காசிமை கொல்ல முயற்சி

Share:

இயக்கவாதியும், மனித உரிமை போராட்டவாதியமான வழக்கறிஞர் சித்தி காசிமின் காரின் அடிப்பாகத்தில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவமானது, ஒரு கொலை முயற்சியாகும் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

இந்த சதிநாச வேலையை செய்த சந்தேகப்பேர்வழியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, அந்த வெடிகுண்டில் பதிவாகிய கைரேகை மற்றும் இதர ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

காரின் அடியில் வெடிகுண்டு பொறுத்தப்படுவது மிக கடுமையான குற்றமாகும். இது கொலை செய்யும் முயற்சியாகும் என்று ரசாருடின் ஹுசெயின் கூறினார். கடந்த வாரம், கோலாலம்பூர்,பங்சார், ஜாலான் மாரூஃபில் உள்ள கார் பட்டறைக்கு தனது காரை அனுப்பி வைத்த சித்தி காசிம், காரின் அடிப்பாகத்தில் வெடிபொருளைப் போல இரு பொருட்கள் கட்டப்பட்டுள்ளதாக கார் பட்டறை மெக்கானிக்கிடமிருந்துகிடைக்கப் பெற்ற அழைப்பைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சித்தி காசிம் போலீசில் புகார் செய்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்