Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கருத்துகளைக் கேட்டிருக்கிறார் பிரதமர் !
தற்போதைய செய்திகள்

கருத்துகளைக் கேட்டிருக்கிறார் பிரதமர் !

Share:

மனிதவள அமைச்சராக இருந்த வி சிவக்குமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதைப் பார்க்கும்போது, பிரதமர் பலரது கருத்துகளையும் விமர்சனங்களையும் கேட்டிருக்கிறார் என்பது உறுதியாகிறது என மலேசிய சோசியலிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சர் மாற்றப்பட்டதில் தங்களுக்கு மகிழ்ச்சியே என அக்கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இருந்த எல்லா மனிதவள அமைச்சர்களோடும் தங்களால் இணைந்து செயல்பட முடிந்தது எனக் கூறும் அருட்செல்வன், சிவக்குமாருடன் மட்டும் அது முடியாமல் போனதாகக் குறிப்பிட்டார்.

அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளைக் கொண்டு ஒரு முதிர்ச்சி அடைந்த அமைச்சரவையை தற்பொழுது பிரதமர் அன்வார் மேம்படுத்தி இருக்கிறார்.

குறிப்பாக மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்ற பிறகு, நீண்டகாலமாக தாமதமாகி வரும் சீர்திருத்தங்களை அன்வார் உடனடியாக செயல்படுத்துவார் என்று அருட்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News