ஈப்போ, அக்டோபர்.08-
நேற்று இரவு சிலிம் ரிவர் அருகே நோர்த்-சௌவுத் எக்ஸ்பிரெஸ்வே நெடுஞ்சாலையில், போதைப் பொருட்களுடன் சென்ற கார் ஒன்றை, சுமார் 2 கிலோமீட்டர் துரத்திச் சென்று போலீசார் பிடித்துள்ளனர்.
அக்காரிலிருந்து சுமார் 12.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், அக்காரிலிருந்த இருவர் அருகேயுள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடிவிட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பேரா ஓசிபிடி ஆணையர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் விநியோகம் செய்வதற்காகக் கடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








