Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மகனை மிரட்டி வருகின்றனர் என்கிறார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

மகனை மிரட்டி வருகின்றனர் என்கிறார் துன் மகாதீர்

Share:

ஐந்து ஆண்டு சிறையில் தள்ளுவோம் என்று கூறி தமது மகன் மிரட்டப்பட்டு வருவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கூறுகிறார்.

அரசியல் எதிரிகள் தற்போது தமக்கு எதிராக அநீதியை இழைக்கத் தொடங்கியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டிய துன் மகாதீர், தற்போது தமது மகன் மிரட்டப்பட்டு வருவதாக இன்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

துன் மகாதீரின் மூத்த புதல்வரான 63 வயது மிர்ஸான் மகாதீர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்து கருத்துரைக்கையில் அந்த முன்னாள் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது தந்தையார் துன் மகாதீர், நாட்டின் பிரதமராக இருந்த கால கட்டத்தில் அரசாங்க சார்பு நிறுவனங்களான GLC - யின் சொத்துக்களை வாங்கி விற்பதில் மிர்ஸான் மகாதீர் பெரும் செல்வந்தராக உருவெடுத்தார் என்று அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களின் சொத்து விவரங்களை அம்பலப்படுத்தி வரும் Panama Papers அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதன் தொடர்பில் மிர்ஸான் மகாதீர் அடுத்த 30 நாட்களுக்குள் தனது சொந்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மிடம் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்