Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அலோஸ்டார் பாரதி தமிழ்ப்பள்ளிக்கு வெ. 2 லட்சம் மானியம்
தற்போதைய செய்திகள்

அலோஸ்டார் பாரதி தமிழ்ப்பள்ளிக்கு வெ. 2 லட்சம் மானியம்

Share:

கெடா அலோஸ்டாரில், பழமை வாய்ந்த பாரதி தமிழ்ப்பள்ளிக்குக் கல்வி அமைச்சின் 2 லட்சம் வெள்ளி மானிய ஒதுக்கீட்டை துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் இங் அறிவித்துள்ளார்.

இன்று அலோஸ்டாரில் பாரதி தமிழ்ப்பள்ளிக்கு வருகை மேற்கொண்ட துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் இங், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் தரம் உயர்த்தப்படுவதற்கு ஏதுவாக பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 2 லட்சம் வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அலோஸ்டாரில் நான்கு பள்ளிகளுக்கு மேற்கொண்ட வருகையின் ஒரு பகுதியாக, பாரதி தமிழ்ப்பள்ளிக்கு விஜயம் தந்த லிம் ஹூய் இங் மற்றும் மாநில கல்வி இலாகா அதிகாரிகள் ஆகியோரை வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகப்பன், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குப் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தந்தார்.

1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 86 வயதுடைய பாரதி தமிழ்ப்பள்ளி, ஓரிட மக்களுக்கு ஆற்றியுள்ள கல்விப் பணிக்காக அதன் முன்னாள் பொறுப்பாளர்களுக்கு இன்றைய பொறுப்பாளர்களுக்கும் தமது பாராட்டுகளைத் துணை அமைச்சர் லிம் ஹூய் இங் தெரிவித்துக்கொண்டார்.

Related News