கோலாலம்பூர், நவம்பர்.19-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 12 கிலோ எடை கொண்ட cocaine போதைப் பொருளைக் கடத்தியதாக நம்பப்படும் மூன்று ஜப்பானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று காலையில் சந்தேகத்திற்கு இடமான இருந்த அந்த மூன்று ஜப்பானியர்களின் பயணப் பெட்டியை மலேசிய எல்லை கண்காணிப்பு ஏஜென்சி அதிகாரிகள் சோதனையிட்ட போது நெத்திலி மற்றும் காய்ந்த இறால் பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பேங்காக்கிலிருந்து வந்து இறங்கிய அந்த மூன்று ஜப்பானியர்களின் பயணப் பெட்டிகள் சோதனைக்கு அனுப்பட்ட போது, அவற்றுக்குள் போதைப் பொருள் இருப்பது தெரிய வந்ததாக மலேசிய எல்லை கண்காணிப்பு ஏஜென்சி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








