தஞ்சோங் மாலிம், அக்டோபர்.09-
தஞ்சோங் மாலிமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நச்சத்தன்மையிலான இராயனக் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 11 ஊழியர்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர்.
இந்தச் சம்பவம் குறித்து இன்று மதியம் 12.42 மணியளவில் தஞ்சோங் மாலிம் தீயணைப்பு, மீட்புப் படை நிலையம் அவசர அழைப்பைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரசாயன கசிவினால் Isosianat வகையைச் சேர்ந்த திரவம், 15 லிட்டர் வெளியேறியுள்ளது. இதனை நுகர்ந்து, மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய 11 தொழிலாளர்கள் அருகில் உள்ள கிளினிக்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப் படை இலாகாவின் இடைக்கால இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.








