Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அம்புலன்ஸ் வண்டி தடம்புரண்டது, ஓட்டுநரும், உதவியாளரும் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அம்புலன்ஸ் வண்டி தடம்புரண்டது, ஓட்டுநரும், உதவியாளரும் காயம்

கெடா, கூலிம், ஜாலான் லெபோ ஹை தெக் சாலை சந்திப்பின் சமிக்ஞை விளக்குப்பகுதியில் கார் ஒன்றுடன் மோதி, தடம்புரண்ட அம்புலன்ஸ் வண்டியின் ஓட்டுநரும், மருத்துவ உதவியாளரும் காயம் அடைந்தனர்.

33 வயதுடைய நபர் செலத்திய அந்த தனியார் அம்புலன்ஸ் வண்டியில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் யாரும் ஏற்றப்படவில்லை.

நேற்று இரவு 8.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பினாங்கு, பண்டர் பெர்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான அந்த அம்புலன்ஸ் வண்டி, கூலிம் மருத்துவமனையில் நோயாளி ஒருவரை ஏற்றிச்செல்வதற்காக வந்து கொண்டிருந்த போது சமிக்ஞை விளக்குப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். சுல்கிப்ளி அஸிஸான் தெரிவித்தார்.

எதிர்திசையை நோக்கி 19 வயது நபர் செலுத்திய பெர்சோனா ரக கார், அந்த அம்புலன்ஸ் வண்டியின் பின்புறம் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்ட்ட ஆடவருக்கு வாகனமோட்டும் உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →